Tuesday, March 30, 2010

நடிகர்களை நாடும் அரசியல் தலைவர்கள்.

குஜராத் மாநிலத்தின் brand ambassador ஆக செயல்படும் இந்திய சூப்பர் ஸ்டார் (முன்னால் என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும் ) அமிதாப் பச்சன் ஒரு பொது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் சவானுடன் மேடையை பகிர்ந்து கொண்டதற்கு ,காங்கிரஸ் (டெல்லி) இலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது .முதல்வர் சவானுக்கு ஆகா..... புதுசு புதுசா ..... யோசிக்கிறான்களே ....சிக்கி கிட்டோமையா....... என்று அப்போது தான் உரைத்தது .

பிரச்னை என்ன வென்றால் குஜராத் மாநிலத்தின் brand ambassador ஆக செயல்படும் அமிதாப் எப்படி காங்கிரஸ் கட்சி யின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் ?
ஏன் என்றால் மோடி ஒரு கொலை குற்றவாளியாம் .
அவர் கோத்ரா வில் பல பல படுகொலைகளை நிகழ்த்தி இருக்கிறாராம் .

இப்படி பட்ட கொடூர செயல்கள் புரிந்த மோடி முதல்வராக இருக்கும் மாநிலத்தின் brand ambassodor ஆக இருக்கும் ஒரு நடிகன் எப்படி காங்கிரஸ் கட்சி யின் பொது நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளலாம் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் so called செகுலர் கொள்கையின் மூலையில் இருந்து விழுந்த முத்தான கேள்வி .

இவர்கள் கேட்கும் இன்னொரு கேள்வி கோத்ரா படுகொலைகள் பற்றி அமிதாப் இன் நிலை பாடு என்ன ?






காங்கிரஸ் கட்சி அமிதாபின் நிலைப்பாடு என்ன வென்று தெரிந்து கொள்வதற்கு முன்னால்



1)ஒரு கலைஞன் ,திரை உலகில் நடிப்பவர் தன்னுடைய நிலைபாட்டை சொல்ல வேண்டும் என்றால் ,பாராளுமன்றத்தில் இருக்கும் அணைத்து கட்சி களும் ,முக்கியமாக எல்லா உறுப்பினர்களும் தன் நிலைபாட்டை கூற முன்வருவார்களா.

2) வட கோடி யில் இருக்கும் நம் காஷ்மிரி முஸ்லிம்கள் தங்கள் நிலைபாட்டை கூற plebisite ஒன்றை நடத்த சொல்லி போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள் .அவர்கள் நிலைபாட்டை அவர்கள் கூற அவர்கள் ரெடி தான் .அனால் என்ன பயன் .அவர்கள் பாகிஸ்தான்உடன் இணைவது தான் விருப்பம் என்று சொன்னால் ஏற்று கொள்வீர்களா .

3)எங்கள் தமிழ் நாட்டின் முன்னால் முதல்வர் அண்ணா அவர்கள் தனி தமிழ் நாடு வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்தார் .அவருக்கு நீங்கள் கொடுத்த பதில் என்ன .பின்னர் அவரே தன் முதல்வர் நாற்காலியே போதும் என்று பின் வாங்கினார் என்பது வேறு விஷயம் .

முஸ்லிம்கள் உயிர் போனால் மற்றும் வேஷ்டியை கழற்றி வைத்து விட்டு (வீரத்துடன் )வீதிக்கு வரும் நம் காங்கிரஸ் கட்சி .

1984 இல் சீக்கியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்த போது ,தன் கட்சி தொண்டர்கள் வைத்து அதை கொழுந்து விட்டு எரிய வைத்தது ஏன் .

மலத்தை சாப்பிட செய்யும் so called மேல் ஜாதி யினரிடமிருந்து ,so called s.c சமூகத்தினரை காப்பாற்ற கவலை படுவது இல்லை .ஏன்

இப்படி எத்தனையோ ஏன் .

தங்கள் நிலை என்ன என்பதை முதலில் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும் .

தனக்கு publicity வேண்டும் என்றால் நடிகனை விழாவுக்கு கூப்பிடு .இதில் இரண்டு வகை .

விழா விற்கு நடிகனை கூப்பிடு .இது ஒரு வகை .

விழாவிற்கு வந்த அதே நடிகன் ஏன் வந்தான் என்று இன்னொரு பிரச்சனையை கிளப்பு .இது இன்னொரு வகை .

வாழ்க நம் அரசியல் .

Tuesday, March 23, 2010

பெரியார் தாசன் Vs நித்யானந்தர்

பெரியார் தாசனால் எப்படி பெரியாரின் கருத்துக்களை பிரசாரம் செய்து ,பின்பு அதை பின்பற்றமுடிய வில்லையோ ,அதை போல தான் நித்யானந்தரால் பிரம்மச்சரியம் பற்றி பிரச்சாரம் செய்து அதை பின்பற்றமுடிய வில்லை . நித்யானந்தர் செய்தது அயோக்கிய தனம் என்றால் பெரியார் தாசன் போன்ற வர்களும் அயோக்கியர்களே. பெரியார் தாசனின் பேச்சை கேட்டு நாத்திகர் ஆனவர்கள் இப்போது என்ன செய்வார்கள் .இரண்டு மனிதர் களும் சாதாரண மனிதர்களே .அவர்கள் எல்லாம் தெரிந்த வர்கள் என்று நம்பியது ஏமாந்தவர்களின் குற்றம் அன்றி இவர்கள் குற்றவாளி கள் அல்ல என்பது என் கருத்து .இனிமேல் மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆக வேண்டும். இவர்களை போல உளறுபவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்தவேண்டும் .
அந்த காலம் எப்போது வருமோ ?

Sunday, March 21, 2010

அன்புள்ள சாரு

சாரு, நான் உங்களுடைய ரசிகன் .மக்களை நேரிடையாக பாதிப்பது அரசியல் மற்றும் அரசியல் வாதிகள் தான் .
சாமியார்கள் அல்ல என்பது என் கருத்து .ஒரு லட்சம் கொடுத்து சாமியார் களிடம் போனால் அது பெரிய இழப்பு அல்ல என்பது என் கருத்து .என் மனைவிக்கு அல்லது மகனுக்கு தீராத நோய் குணமானால் நான் லட்ச ரூபாய் கொடுக்க நான் கவலை பட மாட்டேன் .அனால் எனக்கு மின்சாரம் ,குடி நீர் வேண்டும் ,குப்பைகளை அல்ல ஆள் வர வேண்டும்,நல்ல ரோடுகள் வேண்டும் இது போன்ற நிறைய வேண்டும் .அதன் பொறுப்பு அரசியல் வாதி களிடம் உள்ளது .மக்களுக்கு ஒரு பெரயோஜனமும் இல்லாத நித்யா விவகாரம் பற்றி பேசி என்ன பயன். நீங்கள் அரசியல் கட்டுரை கள் எழுத வேண்டும் .விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் .வெகுஜன பத்திரிகையில் எழுதினால் ஆட்டோ வரும் என்று பயந்தால் அட்லீஸ்ட் ப்ளாக் இல் எழுதுங்கள் .இது உங்கள் எழுத்துக்கு என் எதிர் வினை அல்ல .நானும் என் மக்களும் ஏமாறி கொண்டே இருகிறோம் .அது எப்போது நிற்கும்.அதன் ஆதங்கம் மட்டுமே .

Thursday, February 25, 2010

சச்சின் 200

Sachin Tendulkar became the first man in one day internationals to score 200 runs.

அவரது பேட்டியில் எனக்கு பிடித்த அம்சம்
I play for passion not for records.
ஏன் என்றால் passion என்றால் என்ன வென்று நான் எழுதும் பொழுது தான் தெரிகிறது .
passion இருந்ததால் மற்றுமே எழுதுகிறேன்.

(யாரும் வாசிக்க மாட்டார்கள்,யாரும் பணமும் குடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் எழுதுகிறேன் என்றால் அது தான் passion.

ஆனால் சச்சினுக்கு இரண்டுமே கிடைக்கிறது .(fans and finances)


எழுத்து ஒரு நோயா?

ஆம். எழுத்து ஒரு நோய் தான் .
ஏனென்றால்
௧) அது பரவுகிறது. from one writer to another writer.
௨)அதற்கு மருந்து எழுத்து தான் . வாசிப்பு அல்ல .

WHAT A DAY

what a day it has been
The day which has provided me an oppurtunity to express my thoughts
which will be read mainly by me and may be by some one who will have some time
to deviate from
1)his official work
2)his usual practice of surfing prono sites
3)from the unavoidable sufferings of family life
4)trying to understand his wife whom he married many years before(may be 20 years)

thanks for now